தமிழகத்தில் உள்ள அனைத்து வாரச்சந்தைகளையும் மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஒருவர் முழுமையாக குணமாகி வீட்டில் உள்ளார். இருவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பள்ளி , கல்லூரிகள் மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை , பெரிய பெரிய மால்கள் , திரையரங்கம் என மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இந்நிலையில் வருகின்ற 31ஆம் தேதி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து வாரச்சந்தைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. சிறிய கடைகளுக்கு இதுவரை தடையேதுமில்லை, பெரிய அளவிலான வாரச்சந்தைகளுள் தான் 31ம் தேதி வரை மூடுமாறு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல மக்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு பெரிய நகைக் கடைகள் , பெரிய ஜவுளிக் கடைகள் , பல்பொருள் அங்காடிகள் நாளை முதல் மார்ச் 31ஆம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.