Categories
சற்றுமுன் டெக்னாலஜி தேசிய செய்திகள்

BREAKING : கொரோனா வதந்தி : வாட்ஸ் அப்பில் புதிய கட்டுப்பாடு …!!

கொரோனா வைரஸ் குறித்த வதந்திகளை கட்டுப்படுத்துவதற்கு வாட்ஸ் ஆப் புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.

கொரோனா வைரஸை சமாளிப்பது ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம்  அதுதொடர்பான வதந்திகளை சமாளிப்பது என மத்திய மாநில அரசு பேரும் போராட்டங்களை நடத்தி வருகின்றது. பொதுமக்களுக்கு கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய இந்த வதந்திகளை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு எத்தனையோ நடவடிக்கை எடுத்தாலும், அதையும் மீறி தொடர்ச்சியாக தேவையில்லாத வதந்திகள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக வாட்ஸ் அப்பில் தான் இந்த மாதிரியான தேவையில்லாத தகவல்கள் அதிகமாக பகிரப்படுகின்றது.

வதந்திகளை தொடங்குவது யார்? - ஆராய ...

இதனால் பொதுமக்களுக்கு கொரோனா குறித்து நிறைய அச்சுறுத்தல் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது வாட்ஸ் ஆப் புதிய கட்டுப்பாடு கொண்டுவந்துள்ளது. அதாவது ஒரு குழுவில் வரும் பெரிய கட்டுரை  போன்ற மெசேஜ் , குறுஞ்செய்திகள் இனி தனி நபர் ஒருவருக்கு மட்டும் தான் அனுப்ப முடியும்.

இதற்க்கு முன்பு 5 பேருக்கு அனுப்பலாம் என்று இருந்த கட்டுப்பாடு தற்போது ஒருவருக்கு மட்டுமே ஒரே சமயத்தில் அனுப்பலாம் என்ற புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் கொரோனா குறித்த வதந்திகளை கட்டுப்படுத்தமுடியும் என்று நம்பப்படுகின்றது.

Categories

Tech |