பிரபல பாலிவுட் பாடகிக்கு கொரோனா தொற்று இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சிகிச்சை பெற்று வந்த இத்தாலியை சேர்ந்தவர் உயிரிழந்துள்ளார். இந்தியாவிற்கு சுற்றுலா வந்த 69 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். ஏற்கனவே கொரோனா வைரஸால் இந்தியாவில் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது பலியானவர்கள் எண்ணிக்கையானது 5ஆக உயர்ந்துள்ளது.
சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிா்களை பலி வாங்கியுள்ளது. இதுவரை இந்த வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 206ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூர் தனக்கு கொரோனா தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ட்விட் செய்துள்ளார். நானும் எனது குடும்பமும் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து சிகிச்சையில் இருக்கின்றோம் என்றும் கனிகா கபூர் தெரிவித்துள்ளார்.