Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

BREAKING : அகமதாபாத்திலிருந்து சென்னை வந்தவருக்கு கொரோனா …!!

அகமதாபாத்தில் இருந்து சென்னை வந்து பேசின் பிரிட்ஜ் பகுதியில் தங்கி இருந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற்று குஜராத் சென்று அங்குள்ள அகமதாபாத்தில் இருந்து மதப்பிரச்சாரம் செய்ய சென்னை வந்த 39 பேர் தேனாம்பேட்டை, சுளை , பெரியமேடு பகுதிகளில் மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தாகவும், கொரோனா அறிகுறி தொடர்பாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தாமல் தொடர்ந்து மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியானதையடுத்து அவர்களை கண்டறியக்கூடிய பணியில் காவல்துறையினர் ஈடுபட்டார்கள்.

இந்நிலையில் 19 பேரை கண்டறிந்த காவல்துறையினர் அவர்களை தனியாக ஒரு பேருந்தில் அழைத்துச் சென்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனையில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தினர். இதில் பேசின் பிரிட்ஜ் பகுதியில் தங்கி இருந்தவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |