தமிழக துணை முதல்வர் சகோதரர் ஓ.ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக துணை முதல்வரின் சகோதரரும், தேனி மாவட்டத்தின் ஆவின் தலைவருமான ஓ.ராஜாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இன்று காலை அவருக்கு கொரோனா சோதனை நடத்திய நிலையில் அவருக்கு கொரோனா நோய் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இன்று காலை நடைபெற்ற பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், ஆனால் அவருக்கு நோய்க்கான எந்தவிதமான அறிகுறியும் இல்லை என்றும் சொல்லப்படுகின்றது. இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. அதோடு அவருடன் தொடர்பில் இருந்த அனைவரையும் பரிசோதிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.