Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#Breaking: சென்னையில் ஐபிஎஸ் அதிகாரிக்கு கொரோனா.!

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்திய அளவில் கொரோனாவுக்கு அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் 4வது இடத்தில் இருந்து வருகிறது.  இங்கு 3023 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 30 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல கொரோனா சிகிச்சையை சிறப்பாக வழங்கி வரும் தமிழகம் 1,379 பேரை குணப்படுத்தி அதிகமானோரை மீட்டதாக இந்திய அளவில் 2ஆவது மாநிலமாக விளங்குகின்றது.

சென்னையில் நேற்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,458ஆக அதிகரித்துள்ளது.கோயம்பேடு காய்கறி சந்தை மூலமாக 8 மாவட்டங்களில் 321 பேருக்கு தொற்று  பரவியுள்ளது. இதையடுத்து அங்கு அடிக்கடி ஆய்வுக்கு சென்ற ஐபிஎஸ் அதிகாரிக்கு தற்போது கொரோனா உறுதியாகியுள்ளது.

சென்னை அண்ணாநகர் காவல்துறை துணை ஆணையராக  பணிபுரிந்து வரும் ஐபிஎஸ் அதிகாரியான இவர்  கோயம்பேடு பகுதிக்கு  அடிக்கடி ஆய்வு சென்று  வந்த நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

Categories

Tech |