Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பிஸியா இருக்கும் சூர்யா….. நன்றி சொன்ன அமைச்சர்…. கொண்டாடும் ரசிகர்கள் ….!!

கொரோனா விழிப்புணர்வு குறித்து நடிகர் சூர்யா வீடியோ வெளிட்டதற்காக அமைச்சர் விஜயபாஸ்கர் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில்வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. மார்ச் 31-ஆம் தேதி வரை போக்குவரத்து சேவை ரத்து, ஊரடங்கு உத்தரவு , பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.அதேபோல கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக இன்று ஒருநாள் நாடு முழுவதும் சுய ஊரடங்கை பின்பற்றுமாறு பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.

நாடு முழுவதும் உள்ள பொது மக்களின் முழு ஒத்துழைப்போடு இந்த சுய ஊரடங்கு வெற்றிகரமாக நிகழ்ந்துள்ளது. அதேபோல ஒவ்வொரு மாநில அரசாங்கமும் கொரோனவை தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். கொரோனா பரவலை தடுப்பதற்காக மக்களுக்கு  திரைப்பிரபலங்கள் , விளையாட்டு பிரபலங்கள் மூலமாக விழிப்புணர்வு பிரச்சார வீடியோக்களை அரசு வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வு வீடியோவை பதிவிட்டிருந்தார். இதற்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நன்றி தெரிவித்துள்ளார். அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், எனது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி.

உங்கள் பிஸியான கால அட்டவணை இருந்தபோதிலும் இந்த வீடியோவை உருவாக்க நீங்கள் நேரம் எடுத்தீர்கள் மற்றும் விழிப்புணர்வை பரப்ப எங்களுடன் சேர்ந்து கொண்டீர்கள். பொதுமக்கள் விழிப்புணர்வுக்காக விரைவில் திரையிடப்படும் என்று பதிவிட்டுள்ளார்.

 

Categories

Tech |