தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. 400க்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள். தமிழகத்தில் அதிகமாக டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்த 8 பேர் குணமடைந்த நிலையில் பலியானோர் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.
சென்னை ஸ்டாலின் மருத்துவமனையில் ஏப்ரல் 2-ல் இறந்த நோயாளிக்கு கொரோனா இருந்தது நேற்று உறுதியாகியுள்ளது. துபாயில் இருந்து ராமநாதபுரம் கிழக்கரையை சேர்ந்த முதியவர் ஏப்ரல்2 -ல் ஸ்டாலின் மருத்துவமனையில் மூச்சுத்திணறலால் உயிரிழந்தார்.இந்நிலையில் கடந்த 3-ம் தேதி அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட உறவினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.