Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : கொரோனா – சென்னையில் 3000 வீடுகள் கண்காணிப்பு …!!

சென்னையில் தனிப்பட்டு இருக்கும் 3 ஆயிரம் வீடுகளை கண்காணித்து வருவதாக மாநகராட்சி அதிகாரி தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. தமிழகத்தில் மட்டும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனவை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்திற்கு கடந்த ஒரு மாதங்களில் 9,000_திற்கும் அதிகமானோர் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளனர். அவர்கள் அனைவருமே வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

 

தொடர்ச்சியாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட அவர்கள் வெளியே சுற்றி வருவதாக தகவல்கள் வெளிவந்ததையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர்கள் மீது சட்ட ரதியாக நடவடிக்கை எடுக்கபடும் என்றும் தெரிவித்திருந்தார்.அதன் ஒரு பகுதியாக அதீத நடவடிக்கையாக அவர்களின் பாஸ்போர்ட் முடக்குவதற்கு தமிழக அரசு பரிந்துரை செய்யும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய விமானங்களில் இருந்து வந்தவர்கள் யார் ? யாரெல்லாம் என்ற நீண்ட பட்டியலை சென்னை மாநகராட்சி தயார் செய்துள்ளது. அந்த வகையில் சென்னை வந்துள்ளவர்களின் 3000 வீடுகளும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சேனை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி பகுதியில் இருக்கும் வீடுகளில் பெயர் , முகவரி , நம்பர்  என ஒரு ஸ்டிக்கர் வீட்டு வாசலில் ஒட்டப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பக்கத்து வீட்டில் இருக்கக் கூடியவர்களுக்கு வெளிநாட்டில் வந்தவர்கள் என்று தெரியும் அளவிற்கு அந்த ஸ்டிக்கர் வடிவமைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் உள்ள 3000 ஆயிரம் குடும்பங்கள் கண்காணிப்பில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தாரனர்.

Categories

Tech |