தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,927 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 36,841 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 30 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,897 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை – 1,390, கடலூர் – 7, தருமபுரி – 3, திண்டுக்கல் – 3, ஈரோடு – 1, கள்ளக்குறிச்சி – 3, புதுக்கோட்டை – 5காஞ்சிபுரம் – 33, கிருஷ்ணகிரி – 1 கன்னியாகுமரி – 5 மதுரை – 10 நாகை – 4 நாமக்கல் – 2 ராமநாதபுரம் – 6, ராணிப்பேட்டை – 24, சேலம் – ஒருவர், சிவகங்கை – 2, திருவண்ணாமலை – 23 பேர், திருவாரூர் – 12, திருவள்ளூர் – 105, தூத்துக்குடி – 23, நெல்லை – 6, திருச்சி – 12 ,வேலூர் – 11, விழுப்புரம் – 7 பேருக்கும் இன்று புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில்1,162 பேர் ஆண்கள், 765 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 22,828 ஆண்களும், 13,996 பெண்களும், 17 திருநங்கைகளும் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 17,179 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் 44 அரசு மற்றும் 33 தனியார் மையங்கள் என மொத்தம் 77 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.