தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 8,500யை கடந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவையும் மிரட்டி வருகிறது. இந்தியாவின் முக்கிய நகரமான டெல்லி, சென்னை, மும்பை போன்ற நகரங்களுக்கு கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. தமிழகத்தைப் பொருத்தவரை கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னை விளங்குகிறது. அங்குள்ள கோயம்பேடு காய்கறி சந்தை மூலமாக பல மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று அதிக அளவில் பரவியது.
குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அங்கு மட்டும் 4,372 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் 8002 பேர் கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ள நிலையில் 53 பேர் உயிரிழந்துள்ளனர். 2051 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 5898 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில் தான் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த விவரம் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டது அதில், இன்று ஒரே நாளில் 716 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 8,718 ஆக அதிகரித்துள்ளது. 6520 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.