தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது.
தமிழகத்தில் மேலும் 106 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தகவல் அளித்துள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிகப்பட்டோரின் எண்ணிக்கை 1075 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 199ஆக உயர்ந்துள்ளது.
இதேபோல கொவையில் மேலும் 22 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் பாதிப்பு 119ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. திருப்பூரில் இன்று ஒரே நாளில் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 8 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரசு கண்காணிப்பில் 162 பேர் உள்ளனர் என சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் கூறியுள்ளார்.
மேலும் தமிழகத்தில் மொத்தம் 23 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் 14 ஆய்வகங்களும், 9 தனியார் ஆய்வகங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று கூறிய அவர், தனியார் மருத்துவமனை செலவுகளை அரசு ஏற்கும் என தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 50 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.