தமிழகத்தில் கொரோனோவால் இன்று ஒரே நாளில் 62 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 1,141ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 2,212 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 47,749ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 55.38% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,949 பேர் கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 86,224ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3,841 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 108 பேரும் இன்று புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 47 அரசு மற்றும் 43 தனியார் மையங்கள் என மொத்தம் 90 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது 37,331 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் 30,039 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனோவால் பாதித்தவர்களில் 2,379 பேர் ஆண்கள், 1,570 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. 12 வயதுக்குட்பட்ட 4,225 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 13 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட 71,728 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 10,271 பேருக்கும் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தகவல் அளித்துள்ளனர்.