Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் இதுவரை 190 பேருக்கு கொரோனா தொற்று… அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 234ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரசால் நேற்று வரை 124 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று ஒருநாள் மட்டும் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் நேற்று புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்ட 57 பேரில் 45 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 234ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், டெல்லி மாநாட்டிற்கு சென்றவர்கள் தாமாக முன்வந்து தகவல் தெரிவித்துள்ளனர். இன்று உறுதி செய்யப்பட்ட 110 பேரும் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று கூறியுள்ளார்.

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் இதுவரை 190 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் டெல்லி மாநாடு சென்று வந்தவர்களின் 1,103 பேர் இருந்த பகுதிகள் முழு கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படும் என்றும் 77,330 பேர் வீட்டு கண்காணிப்பிலும் 81 பேர் அரசு முகாம்களிலும் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |