Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

#Breaking: தமிழகத்தில் மேலும் ஒருவர் பலி – கொரோனா மரணம் 28ஆக உயர்வு …!!

தமிழகத்தில் கொரோனா பாதித்த 96 வயது முதியவர் உயிரிழந்துள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவிலும் சரி, தமிழகத்திலும் சரி தொடர்ந்து கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது. இந்தியாவில் அதிகளவில் கொரோனா பாதித்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 6ஆவது இடத்தில் இருந்தாலும், சிறப்பான சிகிச்சை அளித்து அதிகமானோரை குணப்படுத்திய மாநிலங்கள் வரிசையில் தமிழகம் இரண்டாம் இடம் வகிக்கிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 1,323  பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 1,258 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். 1038 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது 96 முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பேரன் மூலம் தாத்தாவுக்கு கொரோனா பரவிய நிலையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 96 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |