Categories
சற்றுமுன் திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#Breaking: நெல்லையில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு….!

திருநெல்வேலியில் கொரோனா பாதிப்புக்கு முதல் நபர் உயிரிழந்துள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள, நிலையில் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4829 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1516 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். 3278 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.

குறிப்பாக ஈரோடு, சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதால் அந்த இரண்டு மாவட்டங்களில் மட்டும் தற்போது வரைகொரோனா தொற்று இல்லை. அதே போல திருநெல்வேலி மாவட்டத்தில் 67 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இதில் 59 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் 8 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் தற்போது நெல்லையில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் இன்று உயிரிழந்துள்ளார். இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |