Categories
தேசிய செய்திகள்

BREAKING: அயோத்தி வழக்கில்….. ”ராமர் கோவில் கட்டலாம்” கோர்ட் அதிரடி…

இந்திய நீதித்துறை வரலாற்றில் மிகவும் முக்கிய வழக்குகளில் ஒன்றாக கருதப்படும் அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பராசக்தி திரைப்பட காட்சி போல நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது. அந்த வரிசையில் கடவுள் ராமருக்காக வழக்கு தொடர்ந்த விநோதம் மட்டுமல்லாமல் வரலாறு மத நம்பிக்கை , தொல்லியல் ஆய்வு , அரசியல் என அனைத்தும் பின்னிப் பிணைந்த ஒரு வழக்கு உண்டு என்றால் அது பாபர் மசூதி வழக்கு தான். மசூதி இடிக்கப்பட்டதோ அல்ல  அங்கு ராமர் கோவில் கட்டவேண்டும் என்பதோ அல்ல மூல வழக்கு நிலம் யாருக்கு சொந்தம் ? என்பதே

சர்சைக்குரிய நிலம் :

அயோத்தி சர்ச்சைக்குரிய பிறகு அங்கிருந்த 71.3 ஏக்கர் நிலம் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதில் மசூதி இருந்த 2.77 ஏக்கர் நிலம்தான் சர்ச்சைக்குரிய இடம் ஆகும்.

இஸ்லாமியர்கள் வாதம் : 1528 ஆம் ஆண் கட்டப்பட்ட பாபர் மசூதியை நிர்வகித்து வருவதால் அந்த இடம் முழுவதும் சன்னி வக்பு வாரியத்துக்கு சொந்தம் என்பது இஸ்லாமியர்களின் வாதம்.

இந்துக்களின் வாதம் :   1,81,66,500 ஆண்டுகளுக்கு முன்பு ராமர் அங்கே பிறந்தார் என்பதால் அந்த இடம் இந்துக்களுக்கு சொந்தம் என்பது இந்துக்களின் வாதம்.

தொழுகையும் , வழிபாடும் :

சுமார் 430 ஆண்டுகளாக மசூதியில் தொழுகை நடத்தப்பட்டு வந்திருக்கிறது. மசூதிக்கு வெளியே ராமர் பிறந்த இடமாக கூறப்படும் ராம் சபுத்திரா , சீதை சமையல் செய்த இடமாக சொல்லப்படும் சீதா ரசோய் ஆகிய இடங்களில் 1880 முதலே இந்துக்கள் வழிபாடு நடத்தி வந்துள்ளனர்.1949 ஆம் ஆண்டு மசூதிக்குள் அத்துமீறி ராமர் சிலை வைக்கப்பட்டதால் சர்ச்சை வெடித்தது , நிலம் யாருக்கு என்ற பிரச்சினை எழுந்த பிறகு மசூதி வளாகம் பூட்டப்பட்டது.

நிலத்திற்கு உரிமைகோரி வழக்கு :

1885 ஆம் ஆண்டு மசூதிக்கு வெளியே கோவில் கட்டிக்கொள்ள வழக்கு தொடர்ந்த நிர்மோகி அகாரா 1959 ஆம் ஆண்டில் தான் மசூதி இருந்த இடம் முழுவதற்கும் உரிமை கோரி வழக்கு தொடர்ந்திருந்தது. மசூதி இடத்தை ஒப்படைக்க கோரி சன்னி வக்பு வாரியம் 1961 ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்தது.

மனுதாரராக இணைந்த இராமர் :

அயோத்தி வழக்கில் , ராம் லல்லா , விராஜ் மானும் ஒரு மனுதாரராக இணைந்தது வினோதமானது. 1989ஆம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி தேவகி நந்தன் அகர்வால் ராமருக்காக பாபர் மசூதி இடத்திற்கு உரிமை கோரி மனு தாக்கல் செய்தார். உரிமையில் சட்ட விதியின் படி கடவுள் சிலை சட்ட ரீதியான ஒரு நபராகவும் , மைனராகவும் கருதப்படுகிறது. இச்சட்டத்தின் படி ராமர் மைனர் என்பதால் அவர் நண்பராக தேவகி நந்தன் அகர்வாலை அங்கீகரித்து அவரது மனுவையும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இப்படியாக பட்டா, பத்திரம் அனுபவ பாத்தியதை ஆகியவற்றின் அடிப்படையிலான நில உரிமை வழக்கில் மத நம்பிக்கையும் இணைந்து விசாரணையை சிக்கலாக்கியது.

தொல்லியல்துறை ஆய்வு :

பாபர் மசூதி தொடர்பான மனுக்கள் அனைத்தும் அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தன. வழக்கு நடந்து கொண்டிருந்தபோதே 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டதால் பிரச்சனை பூதாகரமாக ஆனது. இந்த நிலையில் சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் இருந்ததற்கான சான்று இருக்கிறதா ? என்பதை கண்டறியுமாறு தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் ஆணையிட்டது.பாபர் மசூதி இருந்த இடத்தில் குழி தோண்டி ஆய்வு நடத்திய தொல்லியல்துறை 2003-ஆம்  ஆண்டு அறிக்கையும் அளித்தது.

அலகாபாத் உய்ரநீதிமன்றம் தீர்ப்பு :

வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. சர்ச்சைக்குரிய இடத்தை நிர்மோகி அகரா , ராம்லல்லா மற்றும் சன்னி வக்பு வாரியம் சரிசமமாக மூன்றாகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

40 நாட்கள் விசாரணை : 

மேல்முறையீட்டு வழக்கு விசாரணையானது தலைமை நீதிபதி ரஞ்சன் கோக்காய் தலைமையிலான அரசியல் சாசன விசாரித்து வந்தது. இடைவிடாது காலை மாலை என தொடர்ந்து 40 நாட்கள் விசாரணை நடைபெற்ற அதே வேளையில் நீதிமன்றத்திற்கு வெளியே பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள குழு அமைக்கப்பட்டும் தீர்வு கிடைக்காத நிலையில் 40 நாள் விசாரணை முடிந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு : 

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோக்காய் வரும் 17_ஆம் தேதி ஓய்வு பெற இருக்கின்றார். அதற்க்கு முன்னதாக தீர்ப்பு அறிவிக்கப்படும் என்ற நிலையில் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பல படுத்தப்பட்டது. தீர்ப்பு எப்படி வந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் உட்பட பலரும் தெரிவித்த நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியாகுமென்று நேற்று தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நாடு முழுவதிலும் பாதுகாப்பு உன்னிப்பாக கவனிக்கப்பட்டது.

இன்று காலை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு சார்பாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோக்காய் ஒருமித்த தீர்ப்பாக தீர்ப்பை வாசிக்க தொடங்கி அதில் அயோத்தி வழக்கில் ராமர் கோவில் கட்டலாம் என்று தீர்ப்பளித்தார். இதில் அயோத்தி சர்சைகுரிய இடம் என்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பளித்தார்.

Categories

Tech |