மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பட்டாசு ஆலை விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வடக்கம்பட்டி பட்டி அழகுசிறை கிராமத்தில் செயல்பட்டு வந்த வெள்ளைப்பவன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு குடோன்களில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள் ஐந்துக்கு மேற்பட்டோர் பலியாகி உள்ள சூழலில் ஒருவர் உடல் ஆங்காங்கே தலை, உடல் பகுதி, கால் பகுதி என தென்னந்தோப்பு பகுதிகளில் சிதறி கிடக்கின்றன.
இதில் வடக்கம்பட்டியை சேர்ந்த அமாவாசி, வல்லரசு, கோபி அதேபோன்று புளியங்கவுண்டன்பட்டியை சேர்ந்த விக்கி, அழகுசிறை பகுதியை சேர்ந்த பிரேமா என ஐந்து பேர் அடையாளம் காணப்பட்டுள்ளது. உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என காவல் துறை அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். தீயணைப்பு துறையினர், காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.