ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் போடும்போது தோனியிடம் அடுத்த ஆண்டு நீங்கள் விளையாடுகிறீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு தோனி “கண்டிப்பாக! சென்னைக்கு நன்றி சொல்லாமல் இருப்பது அணியாயம்! சிஎஸ்கே ரசிகர்களுக்கு அப்படி செய்வது நன்றாக இருக்காது” என பதிலளித்துள்ளார். அதனால் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியிலும் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி இருப்பார் என்பது உறுதியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த போட்டியுடன் தோனி ஐபிஎல் தொடரில் இருந்தும் விலக உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அது உண்மை இல்லை என்பதை அவரே தெரிவித்துள்ளார்.
Categories