தமிழகத்தில் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் பரவல் சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருவதால் உலக நாடுகள் அச்சமடைந்துள்ளன. இதை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பி வந்தது .
இதையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கை ஜனவரி 31 வரை நீட்டிக்க மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு உருமாறிய கொரோனா வந்தாலும் அதைக் கட்டுப்படுத்தக் கூடிய கட்டமைப்பு நம்மிடம் உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.