பிப்ரவரி-28 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து அனைத்து பொது இடங்களும் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக ஊரடங்கு பல மாதங்களாக நீட்டிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து தொற்று பரவல் சற்று குறைந்த நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் பிப்ரவரி 28ஆம் தேதி வரை தரவுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளது. புதிய தளர்வாக 50 சதவீதத்துக்கும் அதிகமான இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி அளித்துள்ளது. திரையரங்குகள் கூடுதல் இருக்கைகளுடன் அனுமதி பற்றிய வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். மேலும் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.