Categories
மாநில செய்திகள்

BREAKING: ஊரடங்கில் தளர்வு… ஞாயிறு அன்று… வெளியான அறிவிப்பு..!!!

விடுமுறையால் ஞாயிற்றுக்கிழமை அன்று கோயம்பேடு மார்க்கெட் வழக்கம் போல் செயல்படும் என அங்காடி நிர்வாக குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டு வருவதால் அவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் தற்போது எந்தவித தொடர்புகளும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களின் அத்தியாவசிய தேவைக்காக கோயம்பேடு சந்தையில் காய்கறி, பழம், பூ மார்க்கெட்டில் உள்ள கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், வியாபாரிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று வார விடுமுறையான ஞாயிறு அன்று கோயம்பேடு மார்க்கெட் வழக்கம் போல் செயல்படும் என அங்காடி நிர்வாக குழு சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Categories

Tech |