ஊரடங்கை சரியாக பின்பற்றாத மாநிலத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் ஆய்வு நடத்துகின்றார்கள்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. மே 3ஆம் தேதி வரை அத்தியாவசிய சேவைகளை தவிர பிற சேவைகள் முழுவதும் தடைவிதிக்கப்ட்டது. மேலும் பொதுமக்கள் பொதுஇடங்களில் கூடவும் தடைவிதிக்கப்ட்டனர். இதில் மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள சந்தைகளில் பொதுமக்கள் கூடி ஊரடங்கு வீதிமிறல் நடந்துள்ளதாக பல்வேறு புகார்கள் எழுந்தன.
மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் இது சம்பந்தமாக விளக்கம் அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அம்மாநில தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதே மாதிரி மத்திய அரசின் குழு கண்காணிக்க இருக்கின்றது. அதே போல மகாராஷ்டிராவில் பொருத்தவரை நாட்டிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. அங்கும் உறங்கு மீறல் நடைபெறுகிறதா ? என்பதை கண்காணிக்க மத்திய அரசு குழுவை அனுப்பியுள்ளது.
அதற்கு அடித்தபடுயாக ராஜஸ்தானின் கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா அதிகரித்து வரக்கூடிய சூழலில் இங்கு ஊரடங்கு உத்தரவுகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக மத்திய அரசின் குழு சென்றுள்ளது. அடுத்த மூன்று நாட்களில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்த நிற்கிறார்கள். அதற்கு பிறகு இவர்கள் உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை சமர்ப்பித்து அதன் அடிப்படையில் அந்த மாநில அரசுகள் மீதான நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரியவரும்.
அதே போல மத்திய பிரதேசம் மாநிலத்தில் கொரோனா தொற்று பரவ தொடங்கிய காலத்தில் தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அமைச்சரவை இல்லை முதல்வர் மட்டுமே இருக்கிறார். இதனால் ஊரடங்கு குறித்து அறிவிப்பு முழுமையாக கடிபிடிக்கப்படுகின்றதா என்று ஆய்வு நடைபெற்று வருகின்றது.