காஞ்சிபுரம் தேவரியம்பாக்கம் கிராமத்தில் எரிவாயு சிலிண்டர் குடோனில் தீ விபத்து ஏற்பட்டு
7 பேர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனயில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே இருக்கக்கூடிய தேவரியம்பாக்கம் என்ற கிராமத்தில் தனியார் கேஸ் குடோன் ஆனது செயல்பட்டு வந்தது. இந்த கேஸ் குடோனில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இதில் பணிபுரிந்த 12 பேர் தீ விபத்தில் சிக்கி தீக்காயத்துடன்மீட்கப்பட்டனர். 5 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இதில் பாதிக்கப்பட்டிருந்த மேலும் ஏழு பேர் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீக்காயத் தடுப்பு பிரிவு அனுமதிக்கப்பட்டு, தொடர் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஆறு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒருவர் உடல்நிலையில் சற்றுமுன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. மீதம் உள்ள 5 பேருக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை பார்ப்பதற்காக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று காலை 9 மணிக்கு மேலாக வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்ககின்றது.
தனியார் கேஸ் குடோனில் விபத்து ஏற்பட்டதை அடுத்து, தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று தேவையான நடவடிக்கைகளை, மீட்கும் மீட்பு பணிகளை மேற்கொண்டு இருந்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. கேஸ் குடோனில் உரிமையாளர் மற்றும் அதில் இருக்கக்கூடிய மேலாளர்களை அழைத்து இந்த விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.