Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: காஞ்சிபுரத்தில் சிலிண்டர் விபத்து – 5 பேர் மீது FIR – போலீஸ் தீவிர விசாரணை …!!

காஞ்சிபுரம் சிலிண்டர் குடோன் விபத்தில் அஜாக்கிரதையாக செயல்பட்டதாக ஐந்து பேர் மீது வாலாஜாபாத் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே இருக்கக்கூடிய தேவரியம்பாக்கம் என்ற கிராமத்தில் தனியார் கேஸ் குடோன் ஆனது செயல்பட்டு வந்தது. இந்த கேஸ் குடோனில் நேற்று மாலை திடீரென  ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இதில் பணிபுரிந்த  12 பேர் தீ விபத்தில் சிக்கி தீக்காயத்துடன்மீட்கப்பட்டனர். 5 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் இதில் பாதிக்கப்பட்டிருந்த மேலும் ஏழு பேர் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீக்காயத் தடுப்பு பிரிவு அனுமதிக்கப்பட்டு, தொடர் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆறு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒருவர் உடல்நிலையில் சற்றுமுன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. மீதம் உள்ள 5 பேருக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை, ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார் அவரது மனைவி சாந்தி, குடோன் உரிமையாளர் ஜீவானந்தம், பொன்னிவளவன் மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அஜாக்கிரதையாக செயல்பட்டது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |