Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: ”பாஜகவில் இணைந்த சிந்தியா” மத்திய அமைச்சர் பதவி …!!

காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தார்.

மத்திய பிரதேச மாநில ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் முதல்வர் கமல்நாத் , திக்விஜய் சிங் , ஜோதிராதித்ய சிந்தியா என 3 குழுக்களாக கோஷ்டி பூசல் இருந்து வருகின்றது. இதன் காரணமாக ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடிக் கொடுத்ததில் முக்கிய நபராக பார்க்கப்பட்ட ஜோதிராதித்ய சிந்தியா வின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 22 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.

 

இதனிடையே ஜோதிராதித்ய சிந்தியாவும் நேற்று பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசினார். அதோடு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு தனது ராஜினாமா கடிதத்தை  அனுப்பி வைத்தார்.

 

அதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியும் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் ஜோதிராதித்ய சிந்தியா கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக அறிக்கை வெளியிட்டது. இதனால் அவர் பாஜகவில் விரைவில் இணைவார் என்று சொல்லப்பட்ட நிலையில், டெல்லி பாஜக தலைமையலுவலகத்துக்கு  ஜோதிராதித்ய சிந்தியா வந்தடைந்தார்.

அதை தொடர்ந்து அங்கிருந்த பாஜகவின் தேசிய தலைவர் ஜெ.பி நட்டா முன்னிலையில் தன்னை பாஜகவில் அதிகாரபூர்வமாக இணைத்துக் கொண்டடார். அவருக்கு மாநிலங்களவை பதவி வழங்கப்பட்டு , மத்திய அமைச்சர் பதவியும் வழங்கப்படுமென்று எதிர்பார்க்கப்டுகின்றது.

 

Categories

Tech |