கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கொல்கத்தாவில் முதல் மரணம் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமானம், இரயில் போக்குவரத்து சேவையை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகளுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்து வந்த அனைத்து வெளிநாட்டு பயணிகளும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு கொரோனோ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். 19 மாநிலங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 400யை தாண்டிய நிலையில் நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்ததுள்ளது.
இதை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது,கொல்கத்தாவின் டம்டம் என்ற பகுதியில் இருந்து அனுமதிக்கப்பட்ட 55 வயதான நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் தற்போது உயிரிழந்துள்ளார். இறுதி நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இது மேற்கு வங்க மாநிலத்தின் முதல் மரணம் ஆகும்