Categories
மாநில செய்திகள்

BREAKING: 17,69,000 வாக்காளர் நீக்கம்: தமிழக தேர்தல் ஆணையம் அதிரடி …!!

1.1.2023இல் இருந்து தகுதியற்ற நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை,  திருத்தத்தினை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன் அடிப்படையில் சற்று நேரத்திற்கு முன்னதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு செய்தியாளர்களை சந்தித்து இருந்தார். அப்போது அவர் இன்று முதல் டிசம்பர் 8ஆம் தேதி வரை வாக்காளர் பெயர் பட்டியலில் புதியதாக பெயர் சேகரிப்பவர்கள், பெயர் திருத்தம் செய்யக்கூடியவர்கள் அனைவரும் செய்து கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.

புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2023 வரைவு வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டின் தற்போது 6 கோடியே 18 லட்சத்து 26 ஆயிரத்து 182 வாக்காளர்கள் உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். அதில் ஆண்கள் 3 கோடியே மூன்று லட்சத்து 95 ஆயிரத்து 103 பேரும்,  பெண்கள் 3 கோடியே 14 லட்சத்து 2321 பேரும்,  மூன்றாம் பாலினத்தவர் 7, 758 பேர் இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள்.

அதேபோல இரட்டை பெயர் மற்றும் இறந்தவர்கள் என்ற அடிப்படையில் இந்த ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் இருந்து 17 லட்சத்தி 69 ஆயிரம் பேர் பெயர்கள் நீக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார் அதேபோல மாநிலத்திலேயே அதிக வாக்காளர்கள் கொண்ட சட்டமன்ற தொகுதியாக 6,66,464 வாக்காளர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தின் சோளிங்கநல்லூர் தொகுதி இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அதேபோல மாநிலத்திலேயே குறைந்த அளவு வாக்காளர்களை கொண்ட சட்டமன்ற தொகுதியாக ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 21,711 வாக்காளர்களுடன் சென்னை மாவட்டத்தின் துறைமுகம் தொகுதி இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

Categories

Tech |