Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: இபிஎஸ்-ஐ சந்திக்க அனுமதி மறுப்பு – ஜி.கே. வாசன் சாலை மறியல் ..!!

அதிமுகவின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காவல்துறை சார்பில் இருந்து அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அவர்கள் இன்று காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு, ராஜரத்தினம் மைதானத்தில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் காலையிலிருந்து எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதற்காக பிற கட்சி சேர்ந்தவர்களும், முக்கிய தலைவர்களும் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

இந்த வகையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் இருந்து தற்போது ஜிகே வாசன் நேரடியாக சந்தித்து பேசுவதற்காக சென்னை எழும்பூரில் இருக்கக்கூடிய ராஜரத்தினம் மைதானத்திற்கு வருகை தந்தார். இந்த நிலையில் காவல்துறையினர் அவரை உள்ளே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியதால் காவல்துறைக்கும் – ஜி கே வாஷனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் அவர்கள் தற்போது சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் திமுக அரசை கண்டித்து இந்த சாலை மறியல் போராட்டமானது நடைபெற்று வருகிறது. கைது செய்து வைக்கப்பட்டவர்கள் தற்போது வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வரக்கூடிய சூழ்நிலையில்,  அவர்கள் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டதற்கு காரணம் என்ன ? என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஜிகே வாசன் காவல்துறையிடம் கேள்வி எழுப்பினார்.

Categories

Tech |