சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஒரு வழக்கு விசாரணையின் போது ஆர்டர்லி முறை குறித்து நீதிபதி கடும் அதிர்ச்சியை தெரிவித்து இருந்தார். 75 வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறோம். ஆனால் ஆங்கில ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஆர்லி முறையை பின்பற்றுவது வெட்கக்கேடானது.
உடனே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மீது நடவடிக்கை எடுக்காத எஸ்பிகளை கண்காணிக்க வேண்டும். இல்லை என்றால் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட நேரிடும் நேற்று தமிழக அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பி, எச்சரிக்கை விடுத்தது சென்னை உயர்நீதிமன்றம். இந்த நிலையில்
போலீஸ் அதிகாரிகள் வீடுகளில் தேவையின்றி அளவுக்கு அதிகமாக உள்ள ஆர்டர்லிகளை திரும்ப பெற டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். உயர்நீதிமன்ற கண்டனத்தை தொடர்ந்து சென்னையில் நடந்த கூட்டத்தில் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்து இருக்கின்றார்.