Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: அண்ணா அறிவாலயத்தில் தர்ணா… ஷாக் ஆன ஸ்டாலின்…. பெரும் பரபரப்பில் திமுக

திமுகவின் உடைய 15 வது அமைப்பு தேர்தலுக்கான வேடப்பு மனு தாக்கல் ஆனது கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. இறுதி நாள் ஆன இன்றோடு வேட்பு மனு தாக்கல் நிறைவடைகிறது. அடுத்து இரண்டு நாட்கள் வேப்பமனு பரிசினையானது நடைபெற இருக்கிறது. வேட்புமனு தாக்கலை பொறுத்தவரை முதல் நாளான 22ஆம் தேதி தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர், அவை தலைவர், துணைச் செயலாளர் மற்றும் பொதுக்குழு – செயற்குழு உறுப்பினர்கள் போன்ற பதவிகளுக்கான வேட்பு மனு தாக்கல் ஆனது நடைபெற்றது.

தென்காசி மாவட்டத்திற்கான வடக்கு மாவட்ட செயலாளர் செல்லதுரை என்பவர் வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதோடு மட்டுமல்லாமல் அவர் தற்போது தென்காசி வடக்கு மாவட்டத்தினுடைய மாவட்ட பொறுப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். இந்த நிலையில் தான்  தென்காசி வடக்கு மாவட்ட செயலாளராக தற்போது தனுஷ் குமார் எம் பியை நியமிப்பதற்காக நடவடிக்கைகளை திமுக தலைமை மேற்கொண்டு வருவதாக தகவல் அறிந்த அந்த மாவட்டத்தினர் அறிவாலயத்திலும் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டிருக்கின்றனர்.

தென்காசியினுடைய வடக்கு மாவட்ட பொறுப்பாளராக இருக்கக்கூடிய செல்லத்துரையை மாவட்ட செயலாளராக அறிவிக்க வேண்டும் என தென்காசி மாவட்ட திமுகவினர் கடந்த அரை மணி நேரத்துக்கு மேலாக அறிவாலயத்தின் முன்பாக தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். தற்பொழுது வரை தென்காசி வடக்கு மாவட்டத்திற்கு செல்லதுரை மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ள சூழலில், அவரை மாவட்ட செயலாளராக அறிவிக்க வேண்டும். அதுவரை நாங்கள் இங்கிருந்து நகர மாட்டோம் என வலியுறுத்தி அங்கேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு இருக்கின்றனர்.

Categories

Tech |