Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING : தோனி ஓய்வு… ”இரவு செய்தியாளர் சந்திப்பு” சோகத்தில் ரசிகர்கள்…!!

இன்று இரவு தோனி செய்தியாளர்களை சந்தித்து ஓய்வை அறிவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முடிசூடா மன்னன்  மகேந்திர சிங் தோனி இன்று இரவு  7 மணிக்கு செய்தியாளர்களை திடீரென சந்திக்க அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்க்கும் தோனி திடீரென அவரே செய்தியாளர்களுக்கு அழைப்பு விடுத்திருப்பது பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 2017 ஆம் ஆண்டு முதல் அணியில் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய அவர் T20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார்.

அதனை தொடர்ந்து சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பையில் அரையிறுதியில் நியூசிலாந்து தோல்வியடைந்ததை அடுத்து தோனி ஓய்வு பெறுவார் என்று தகவல் பரவியது. அதேபோல் மேற்கிந்தியத் தீவுகள் தொடரின்போது தோனி பெயர் இருக்குமா ? இருக்காதா ? என குழப்பம் நிலவிய நிலையில் இரண்டு மாதம் ராணுவ பணிக்கு சென்று பதத்தை தணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்திய கேப்டன் ஹோலி தனது ட்வீட்_டர் பக்கத்தில் ஆட்டத்தின்  போக்கை  மாற்றுபவர் தோனி தான்.அவருடன் விளையாடியதை மறக்க முடியாது என்று பதிவிட்டிருந்தார். கோலி ஏன் இப்படி பதிவிட்டுள்ளார் ? தோனி தற்போது எங்கு இருக்கின்றார். என்று சமூகவலைத்தளத்தில் செய்திகள் வைரலாகின. இதைத்தொடர்ந்து தீடிர் திருப்பமாக இன்று இரவு தோனியே செய்தியாளர்களை சந்திக்க அழைப்பு விடுத்துள்ளாதாக சொல்லப்படுகின்றது.

இன்று இரவு தோனி அழைப்பு விடுத்த செய்தியாளர்கள் சந்திப்பு எதற்காக , அவர் என்ன பேச போகின்றார். ஒரு வேலை தனது  ஓய்வை இன்று அறிவிப்பாரா ? என்ற கேள்வி ரசிகர்களுக்கு எழுந்தாலும் , இன்று கேப்டன் கோலின் தீடிர் ட்வீட் பதிவு தோனியின் ஓய்வு அறிவிப்பை காட்டுகின்றது என்று ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Categories

Tech |