Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : மாவட்ட ஊராட்சி தலைவர்… அதிமுக 14… திமுக 12..!!

மாவட்ட ஊராட்சி தலைவர் போட்டியில் அதிமுக முன்னிலை வகித்துள்ளது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் கடந்த 27 மற்றும் 30 ஆகிய இரண்டு தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதை தொடர்ந்து ஜனவரி 2 ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. இந்த நிலையில் இன்று  27 மாவட்ட ஊராட்சித் தலைவர், 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் 9,624 கிராம ஊராட்சி துணை தலைவர் உட்பட மொத்தம் உள்ள 10, 306 பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் ஐந்து பதவிகளுக்கு தேர்தல் நடந்து வருகின்றது.

மறைமுக தேர்தல் வீடியோ பதிவு செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஆகவே அணைத்து இடங்களிலும் வீடியோ பதிவு செய்யப்பட்டு வருகிறது. சில இடங்களில்  அதிமுக திமுக கட்சிகளுக்கு இடையே கலவரம் ஏற்பட்டு வருகிறது. தற்போது மாவட்ட ஊராட்சி தலைவர் போட்டியில் அதிமுக 14 மாவட்ட ஊராட்சி பதவிகளை  கைப்பற்றியுள்ளது. திமுக 12 ஊராட்சி பதவிகளை கைப்பற்றியுள்ளது. சிவகங்கை மாவட்டதில்  மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல்  பிரச்னை காரணமாக இன்னும் நடத்தப்படவில்லை.

மாவட்ட ஊராட்சி தலைவர் – 26/27

அதிமுக – 14

திமுக – 12

Categories

Tech |