மே 17ஆம் தேதி முதல் அத்தியாவசிய பணிகளுக்காக வேறு மாவட்டங்களுக்கு செல்ல நேர்ந்தால் இ -பாஸ் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டும் என்று எச்சரித்திருந்தது.
இந்நிலையில் தமிழக அரசு மேலும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் மே 17ஆம் தேதி முதல் அத்தியாவசிய பணிகளான திருமணம், இழப்பு உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு மாவட்டங்களுக்கு உள்ளும் வெளியேயும் பயணிக்க இ- பதிவு கட்டாயம் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இ பதிவு முறை 17ஆம் தேதி காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது. https://eregister.tnega.org என்ற இணையதளத்தில் இ-பதிவுக்கு விண்ணப்பிக்கலாம்