Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: ”திமுக – 62 , அதிமுக 43” மாவட்ட கவுன்சிலர் நிலவரம் ….!!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் மாவட்ட கவுன்சிலர் பதவியில் திமுக முன்னிலை வகித்து வருகின்றது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. பதிவான வாக்கு எண்ணிக்கை 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றது.

வாக்கு எண்ணப்படும் மையங்கள் முழுவதும் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படக்கூடாத வகையில் 30354 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு எண்ணப்பட்டு வந்த நிலையில் மாவட்ட கவுன்சிலர் பதவியில் திமுக தொடர்ந்து முன்னிலையில் வகித்து வருகின்றது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை…

முன்னிலை நிலவரம்..!

மாவட்ட கவுன்சிலர் – 105 / 515

திமுக+ – 62

அதிமுக+ – 43

அமமுக – 0

நாம் தமிழர் – 0

Categories

Tech |