வாக்கு எணிக்கை முடிவை உடனடியாக விசாரிக்க திமுக தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றத்தில் அனுமதித்துள்ளது.
இன்று காலை 8 மணியில் இருந்து ஊரக உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவு அறிவிக்கப்பட்டு வருகின்றது. இதில் திமுக வெற்றியை தடுக்க அதிமுக அரசு , அதிகாரிகள் , காவல்துறையினர் முயன்று வருகின்றார்கள் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் மாநில தேர்தல் அலுவலரை சந்தித்து மனு கொடுத்தார்.
இந்நிலையில் திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் எடப்பாடி , சங்ககிரி , மேட்டூர் , கரூர் உள்ளிட்ட பல பகுதியில் வாக்கு எண்ணிக்கை முடிந்தும் முடிவுகள் வெளியிடாமல் இருக்கின்றது. வாக்கு எண்ணிக்கையில் திமுக முன்னிலையில் இருந்து வரும் நிலையில் திமுக வெற்றியை நிறுத்தி வைத்திருப்பதாகவும் குற்றம் சாட்டி முடிவுகளை தாமதப்படுத்தாமல் அறிவிக்க வேண்டுமென்று அவசர வழக்காக மனு தாக்கல் செய்தது.
இந்த மனு நீதிபதி சத்தியநாராயணன் , ஹேமலதா அமர்வில்இந்த மனு வந்த போது உச்சநீதிமன்றம் புதிய விதிமுறைகளின் படி மதியம் 1.30 மணிக்குள் மனுவாக பதிவாகாத வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்ற புதிய விதியை ஏற்றுக்கொண்ட திமுகவினர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி சாஹி_யை சந்தித்து வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுகோள் விடுத்தனர்.
இதனை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி அவசர வழக்காக விசாரிக்க அனுமதி அளித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அந்த வழக்கின் விசாரணை சற்று நேரத்தில் தொடங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த வழக்கு நீதிபதி சத்யநாராயணன் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வர இருக்கின்றது.