டிசம்பர் 1 இல் திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறும் என்று கட்சி தலைமை அறிவித்துள்ளது.
டிசம்பர் 1இல் திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறும் என தற்போது திமுக தலைமையால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கடந்த வாரத்தில் தமிழக முதலமைச்சர் கலந்து கொண்டார். 234 தொகுதிகளிலும் இருக்கக்கூடிய திமுகவினுடைய பூத் எஜெண்டுகள் ஒவ்வொருவரிடமும் வீடியோ கான்ஃபரன்ஸ் வழியாக பேசியிருந்தார்.
தேர்தல் நேரத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் ? எப்படி மக்களுடைய கவனத்தை ஈர்க்க வேண்டும் ? என்பது போன்ற ஆலோசனைகள் எல்லாம் வழங்கப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையிலே டிசம்பர் ஒன்றாம் தேதி திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறும் என்று திமுக தலைமையால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், இளைஞர் அணி, மகளிர் அணி உள்ளிட்ட அனைத்து விதமான அணிகளுக்கான புதிய தலைவர்கள், புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ள சூழலில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.