Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: ஆட்சியை கைப்பற்றும் திமுக! வெளியான கருத்துக்கணிப்பு…!!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக தான் ஆட்சியை கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளர் . இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் அதிமுக ஆட்சியை கைப்பற்றுமா? திமுக ஆட்சியை கைப்பற்றுமா? என்று கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

இந்த கருத்துக்கணிப்பில் தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று ஏபிபி கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. திமுக அணிக்கு 158 – 166 இடங்கள் கிடைக்கும். அதிமுக அணிக்கு 60 முதல் 68 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. மக்கள் நீதி மையம் கட்சிக்கு 0 முதல் 4, அமமுகவுக்கு 2 முதல் 6, இதர கட்சிக்கு 0 முதல் 4 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |