Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : சிக்கலில் மாட்டிவிட வேண்டாம் – பிரதமர் மோடி

சிக்கலில் யாரும் மாட்டி விட வேண்டாம் என்று  பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியை கவுரவிக்க அனைவரும் 5 நிமிடங்கள்  எழுந்து நில்லுங்கள் என்ற வதந்தி பரவி வந்தது. இதற்கு மோடி தனது ட்விட்டர் பதிவில், சிலர் செய்யும் பிரசாரம் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. யாரும் தன்னை யாரும் சிக்கலில் மாட்டி விட வேண்டாம் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் ஒருவேளை என்னை கவுரவிக்க விரும்பினால், உங்களுக்கு உண்மையிலேயே அன்பு இருந்தால்,  கொரோனா வைரஸ் பாதித்துள்ள இந்த காலத்தில் ஏழை குடும்பத்திற்கு உதவும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். ஏழை குடும்பத்தில் உதவுவதை விட எனக்கு சிறந்த மரியாதை அளிக்க முடியாது என்று  தெரிவித்துள்ளார்.

Categories

Tech |