கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற உட்கட்சி தேர்தல், இரட்டை தலைமை தேர்வு, பொதுக்குழு நடத்தப்பட்டது, உறுப்பினர்கள் சேர்க்கை நடத்தாமல் தேர்தல் நடைபெற்றது ஆகியவற்றை எதிர்த்து வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தனர் மற்றும் கே.சி பழனிச்சாமியின் மகன் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதேபோல அதிமுக தேர்தல் நடைமுறைகளை எதிர்த்து கே.சி பழனிச்சாமி தனியாக ஒரு வழக்கும், பொதுக்குழு உறுப்பினராக இருக்கக்கூடிய மற்றொருவர் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தனர்.
சண்முகம் என்பவர் ஜூன் 23ஆம் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழுவை எதிர்த்தும் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்குகள் என நான்கு வழக்குகளும் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பாக விசாரணை வந்தது. அதேபோல ஜூலை 11இல் நடந்த பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு நிலுவையில் இருக்கின்றது.
இந்நிலையில் அதிமுக நிர்வாகம் தொடர்பாக மற்றும் பொதுக்குழு தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிப்பதற்கு சிறப்பு அமர்வை அமைக்க வேண்டும். இரு வேறு நீதிபதி விசாரிப்பதால் சிரமம் இருப்பதாக மனுதாரர்கள் ராம்குமார் ஆதித்தன் மற்றும் கே.சி. பழனிச்சாமி மகன் சுரேஷ் பழனிச்சாமி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற நீதித்துறை பதிவாளரிடம் கடிதம் கொடுத்திருக்கிறார்கள். இந்த கடித விவகாரம் தொடர்பாக நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியிடம் வழக்கு விசாரணைக்கு வந்த போது..
இதனால் அதிர்ச்சி அடைந்த நீதிபதி ஒரு வழக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்று கடிதம் கொடுப்பதுதான் பழக்கமா ? என்று நீதிபதி கேள்வி எழுப்பினர். இது போன்ற கடிதங்களை பரிசீலித்து முடிவெடுப்பதாக நீதிபதி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
மேலும் நீதிபதிக்கு வேற வேலை இல்லையா என நினைக்கிறீர்களா என நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கண்டனம் தெரிவித்ததோடு, தனக்கு முன்பாக பட்டியலிடப்பட்டுள்ள அதிமுக வழக்குகள் அனைத்தையும் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி மீண்டும் பட்டியல் இடுமாறு பதிவுத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணை தள்ளி வைத்திருக்கிறார்.