உயர்நீதிமன்றத்தின் உத்தரவை கொண்டித்து குடிநீர் உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர்.
நிலத்தில் இருந்தும் அனுமதி இல்லாமல் நீர் எடுக்கப்படுவதாகவும் , வணிக நோக்கத்திற்க்காக தண்ணீர் எடுக்கப்படுவதாகவும் இன்று கூறிய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி இல்லாமல் எடுக்கப்படும் நிலத்தடி நீரை மூட வேண்டும் , சீல் வைக்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதில் முழுமையாக மூட விட்டாலும் கூட கொஞ்சம் கொஞ்சமாக கிணறுகள் , ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இது தொடர்பான அறிக்கையை மார்ச் 3ம் தேதி தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டுமென்று உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு அடைக்கப்பட்ட நீர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் முரளி பேசும் போது , குடிநீர் தேவைக்காக தான் நாங்கள் நிலத்தடியில் தண்ணீர் எடுத்து விநியோகம் செய்து வருகிறோம். ஆனால் உயர் நீதிமன்றம் நிலத்தடி நீர் வணிக நோக்கில் பயன்படுத்துவதாக கூறியுள்ளது. நிலத்தடி நீரை நம்பியுள்ள மக்களுக்காக தான் நாங்கள் குடிநீரை முறையான அனுமதி பெற்று எடுத்து வருகின்றோம்.எனவே உயர்நீதிமன்றத்தின் உத்தரவை கண்டித்து இன்று முதலே காலவரையறையற்ற போராட்டத்தை அறிவித்துள்ளனர்.