ஆளுநர் உரை பெருத்த ஏமாற்றத்தை அளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. திமுக ஆட்சி அமைத்த பிறகு 16-வது சட்டமன்றத்திற்கான முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கப்பட்டது. கொரோனா காரணமாக கலைவாணர் அரங்கத்தில் கூட்டத்தொடர் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் என்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர். இதில் ஆளுநர் பன்வாரிலால் பல நல திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியிருந்தார்.
இருப்பினும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரின் உரை பெருத்த ஏமாற்றத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கான கல்விக் கடன் ரத்து குறித்து உரையில் இடம்பெறவில்லை. பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, கோதாவரி காவிரி இணைப்பு, பெண்களுக்கு மாதம்தோறும் உரிமை தொகை வழங்குதல், சுய உதவி குழுக்கள் வாங்கிய கடன் தள்ளுபடி, மீன் படி தடைக்கால நிவாரண தொகையை உயர்த்துவது குறித்து உரையில் இடம்பெறவில்லை என அவர் குற்றம்சாட்டியிருந்தார்.