Categories
மாநில செய்திகள்

#BREAKING: மின்கட்டணம் குறைப்பு – தமிழக அரசு அதிரடி…!!

சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்  நிறுவனங்கள் தங்களுக்கு  25% வரை உயர்த்தப்பட்டிருக்கக்கூடிய மின் கட்டண உயர்வால் தொழில் செய்வதற்கு மிகுந்த சிரமம்   ஏற்பட்டு இருப்பதாக புகார் தெரிவித்திருந்தார்கள். எனவே இந்த கட்டணத்தை குறைக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு அவர்கள் கோரிக்கை வைத்திருந்தார்கள். இந்த நிலையில் மின் கட்டணத்தை பொறுத்தவரை 25 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக குறைக்கலாம் என முடிவு செய்து,

அதற்கான கொள்கை வழிகாட்டுதலை வழங்க அரசு ஆணையிட்டுள்ளதாக செய்தி குறிப்பின் வாயிலாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் மின் கட்டணத்தை குறைப்பதனால் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய சிறுகுறு,  நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் பயனடையும் என்றும் அரசு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

Categories

Tech |