Categories
அரசியல் மாநில செய்திகள்

#Breaking: ஈபிஎஸ் மேல்முறையீடு வழக்கு : இறுதி விசாரணை தொடக்கம்…!!

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை தொடங்கி இருக்கிறது. இபிஎஸ்ஸின் மேல்முறையீடு வழக்கை நீதிபதிகள் துரைசாமி,  சுந்தர் மோகன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. இபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கின் சி.எஸ் வைத்தியநாதன் வாதத்தை தொடங்கினார்.

முன்னதாக அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக, ஓபிஎஸ் மனு மீது தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார். அதில் குறிப்பாக ஜூன் மாதம் 23ஆம் தேதிக்கு முன்பு என்ன நிலை இருந்ததோ அதிமுகவில் அது அப்படியே தொடர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தற்காலிக பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும் அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.அது சம்பந்தமான வழக்கு இன்று விசாரணைக்கு வந்திருக்கிறது

Categories

Tech |