அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில், ஜூன் 23ஆம் தேதியில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் ஒப்புதல் கொடுக்கப்பட்டு நடைபெற்ற பொதுக்குழு வரை இருந்த நிலையிலே இருக்க வேண்டும். செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடத்தக்கூடாது.
இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்தது ரத்து. பொது குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த தீர்ப்பு ஓபிஎஸ்சுக்கு சாதகமான, மிக முக்கியமான தீர்ப்பாக பார்க்கப்படுகின்றது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.