ஒற்றை தலைமை விகாரத்தில் ஓபிஎஸ் உடன் முதல் தீவிரமடைந்திருக்கும் நிலையில் அமித்ஷாவை சந்திக்கிறார் ஈபிஎஸ். இந்த சந்திப்பு குறித்து இரண்டு விஷயங்களை நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டி இருக்கிறது. ஒன்று இந்த சந்திப்பு என்பது உள்துறை அமைச்சரின் வீட்டில் இல்லாமல் உள்துறை அமைச்சகத்தின் அலுவலகத்தில் நடந்திருக்கிறது. டெல்லியில் இருக்கக்கூடிய அலுவலகத்தில் இந்த சந்திப்பு என்பது நடைபெற்றிருக்கிறது. எனவே பெரும்பாலும் இது அரசு சார்ந்த விஷயமான சந்திப்பாக இதனை நாம் கருத வேண்டி இருக்கிறது.
காலை 11 மணிக்கு தொடங்கி இருந்த சந்திப்பு கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு மேலாக நடந்திருக்கின்றது. இந்த சந்திப்பின்போது பல்வேறு கோப்புகள் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் கையில் எடுத்துச் செல்லப்பட்டு இருக்கின்றது. அந்த கோப்புகளில் இருக்கக்கூடிய முக்கியமான ஆவணங்களை மத்திய உள்துறை அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த சந்திப்பின்போது தமிழகத்தில் இருக்ககூடிய முக்கியமான சட்ட ஒழுங்கு பிரச்சனை மற்றும் பல்வேறு துறைகளில் ஊழல் புகார்கள் குறித்து முக்கிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக தகவல் என்பதை கிடைத்திருக்கின்றது.