எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருவதால் திங்கட்கிழமை எம்எல்ஏக்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்று இன்று ஆட்சி அமைத்தது. இதைத் தொடர்ந்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் இன்று ஆளுநர் மாளிகையில் முதல்வராக பதவியேற்றார். இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதில் அதிமுகவில் பெரும் குழப்பம் நீடித்து வருகின்றது.
எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை தேர்வு செய்வதில் அதிமுகவில் இழுபறி நீடித்ததால், எம்எல்ஏக்கள் கூட்டம் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்று நடந்த கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் பதவி வேண்டும் என்றும், இபிஎஸ் எடுத்த முடிவுகள் தான் தேர்தல் தோல்விக்கு காரணம் என்றும் ஓபிஎஸ் குற்றம்சாட்டி உள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் ஜெ நினைவிடத்தில் தொண்டர்கள் முழக்கமிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.