அதிமுக பொதுக்குழு தொடர்பான எடப்பாடி பழனிசாமியின் கூடுதல் மனுவை நாளை விசாரணைக்கு பட்டியலிட நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
ஜூலை மாதம் அதிமுக சார்பில் நடந்த பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ், வைரமுத்து தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை திருத்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. முதற்கட்டமாக ஓ பன்னீர்செல்வம் வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மட்டுமே எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கடந்த வாரம் மேல் முறையீடு செய்யப்பட்டபோது, மனு தாக்கல் முறையில் தான் பட்டியல் இடப்படும் என்று தெரிவித்தார்கள். ஆனால் தீர்ப்பின் உத்தரவு நகல் இல்லாமல் இந்த வழக்கை விசாரிக்க அனுமதிக்க வேண்டுமென்று எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனு தற்போது நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் நீதிபதி உத்தரவிட்ட நகல் கிடைக்கவில்லை. நகல் இல்லாமல் வழக்கை விசாரிக்க அனுமதிக்க வேண்டும். இணையதள காப்பியை சமர்ப்பிப்பதற்கு தயாராக இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதே சமயம் ஓ பன்னீர்செல்வம் வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்து உள்ளதை போல வைரமுத்து வழக்கு உத்தரவை எதிர்த்தும் மேல்முறையீடு தாக்கல் செய்திருப்பதாகவும், அந்தையும் பட்டியலிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இவற்றை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த மனுக்களையும்… அதாவது வைரமுத்து வழக்கில் பிறப்பித்த உத்தரவு, ஓ. பன்னீர் செல்வம் வக்கீல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு என அனைத்து மேல்முறையீடு மனுக்களையும் நாளை விசாரணை பட்டியலிடும்படி பதிவுத்துறைக்கு அறிவித்திருக்கிறார். உத்தரவு நகல் இல்லாமல், இணையதள நகலை வைத்து, மேல்முறையீடு தாக்கல் செய்த மனு நாளை முதல் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.