Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: ஓபிஎஸ் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ் பதில் மனு …!!

உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஒரு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதாவது அதிமுக பொதுக்குழு நடந்த பொழுது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகத்தில் நுழைய முற்பட்டபோது வன்முறை என்பது ஏற்பட்டது. இதனை அடுத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை மூடி இருந்தார். பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு ஒப்படைக்கப்பட்டது.

இதற்கு எதிராக ஓபிஎஸ் அவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், இந்த மனு மீது பதிலளிக்குமாறு கோட்டாட்சியர் மற்றும் ஈபிஎஸ்சுக்கு  நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. நாளை தினம் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கக்கூடிய சூழலில் இபிஎஸ் சார்பில் பதில் மனு இன்று தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.

அதில் ஓபிஎஸ் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது என பகிரங்கமாக கூறியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி அவர்கள். ஓபிஎஸ் அவர்கள் அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. அப்படி இருக்கும்போது அவரிடம் சாவியை எப்படி ஒப்படைப்பது என்ற ஒரு கேள்வியை எழுப்பி இருக்கிறார். மேலும் அவர் உறுப்பினராக இருந்தபோது அதிமுகவின் தலைமை அலுவலகத்தை சூறையாடி இருக்கிறார்.

உள்ளே இருந்த அலுவக பொருட்கள் காணாமல் போயிருக்கின்றது, கடுமையான வன்முறையில்  ஈடுபட்டிருக்கிறார். இப்படிப்பட்ட ஒருவரிடம் சாவியை ஒப்படைப்பதா ? அலுவலகத்தை இவரிடம்  ஒப்படைப்பது என்பது ஏற்க முடியாது என  திட்டவட்டமாக தனது பதில் மனுவில் கூறியிருக்கிறார்.

ஓபிஎஸ் அவர்களுக்கும், அதிமுகவிற்கும் எந்த தொடர்பும் கிடையாது. அப்படி தொடர்பில்லாத ஒருவர் அதிமுகவின் அலுவலக சாவியை கேட்பது என்பது சரியானது அல்ல. எனவே ஓபிஎஸ்  தாக்கல் செய்திருக்கக்கூடிய மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யுங்கள் என அந்த மனுவில் அந்த பதில் மனுவில் இபிஎஸ் அவர்கள் கோரிக்கை வைத்திருக்கின்றார் .

Categories

Tech |