தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவில் பிழை இருப்பதால் அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை.
மதுக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தமிழக அரசின் மனுவில் பிழை இருப்பதால் விசாரணைக்கு ஏற்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது வழக்கு தொடர்பாக மனுதாக்கல் செய்யப்படும் போது சில முக்கியமான ஆவணங்களை வைக்க வேண்டும. அந்த மாதிரியான ஆவணங்களை வைக்காத பட்சத்தில் அந்த மனு பிழை உள்ளதாக கருதப்படும். அந்த பிழை சரி செய்யப்பட்ட பிறகு மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்ட பின்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அதன்படிபிழை சரி செய்யப்பட்டு நாளைய தினம் விசாரணைக்கு வரலாம் இல்லையென்றால் இன்று கூட இந்த வழக்கு விசாரணைக்கு வர வாய்ப்பு மிக அதிகமாக இருக்கிறது.